பக்கங்கள்

தேவதையும் நூற்கண்டும்...







அங்கே ஓர் தேவதை
கையில் ஒரு நூற்கண்டு

நடந்தோ வந்தாள் இல்லை
காற்றில் மிதந்தே வந்தாள்

வந்தவள் சற்றே இடறிட
நூற்கண்டும் தள்ளியே ஓடிட

வேகமாய் உடன் ஓடியும்
அவிழ்ந்தே போனது கட்டும்

எப்படித்தான் சுற்ற திரும்பவும்
தேடியே திரிகிறாள் முடிவினை

சிக்கலுக்குள் சிக்கிய முடிவுகள்
எப்படித்தான் கிடைக்குமோ அவளிடம்

ஓய்வதும் இல்லை அவள்
கிடைப்பதும் இல்லை முடிவு

துரிதமாய் தேடியே அலைகையில்
இன்னுமே சிக்கலாய் நூற்கண்டு

எட்டித்தான் அடைய முடிவினை
தேடித்தான் அலைகிறாள் தேவதை

கிடைத்தது ஒரு முனையும்
அடைந்தாள் மனதில் உற்சாகமும்

இழுத்தே பிடிக்கையில் முனையினை
நினைத்தால் சிக்கலும் தீர்ந்ததாய்

அந்தோ! நினைப்புந்தான் தவறியதே
சிக்கலும்தான் இன்னமும் நீண்டதே

இழுக்க இழுக்க விழுந்தனவே
முடிச்சுகள் ஒன்றாய் பலவாய்

சிக்கலும் இங்கு தீர்வதெப்போ
முடிச்சுகள் மீண்டும் அவிழ்வதெப்போ

கேள்விகள் இங்கே ஆயிரம்
பதில்கள் எங்கே காண்பதின்று


--பிரியா


4 கருத்துகள்:

  1. இனிய கவிதை
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... :)

      நீக்கு
  2. சிக்கலும் தீர்ந்து முடிச்சுக்களும் அவிழ்ந்து வி்டடால் பின் ஏது சுவாரஸ்யம்? அழகான ரசிக்க வைத்த கவிதை! இன்று புலர்ந்திருக்கும் விஜய வருடம் உங்களுக்கு நல்லனவற்றையே தரட்டும் என்று வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வாழ்வின் சுவாரஸ்யம் குறைந்து விடும் தான்... நன்றி... புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

      நீக்கு